134
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலை நடத்தி உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் அவர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை சம்பந்தமாக விளக்கமளிப்பதற்காக தரஞ்சித் சிங் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார். பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ எதுவித பிரச்சினைகளும் இந்தியாவுக்கு இல்லை என்று அவர் இதன்போது தமது பக்க விளக்கத்தை அளித்துள்ளார்.
Spread the love