144
சிலாபம் பரப்பன்முல்ல, முஹூனுவட்டவான பிரதேசத்தில் உள்ள குளத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலத்தை நேற்றையதினம் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் தீக்காயங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love