புலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தமையினால் தீவிரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் பயணிகளை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவதுடன் அவர்களது பயணப் பொதிகளும் ; தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து விமான நிலையங்களினனும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினரும் காவல்துறையினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.