அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் நேற்று சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட விண் ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இன்று இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண் ஓடம், விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தானாகவே சென்று இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில், விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஓடத்தின் முன் பக்கமாகச் சென்று இணையும் இந்த ஓடம், தனது கணினி மற்றும் சென்சார்களின் உதவியுடன் தன்னைத்த் தானே வழிநடத்திக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது இந்த ஓடத்தில், மனித உருவின் மாதிரி ஒன்றும், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான 90 கிலோ எடையுள்ள பொருட்களும் அனுப்பப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண் ஓடத்தில், மனிதர்களை சுமந்து செல்ல அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவிடம் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
00