அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் நேற்றையதினம் தாக்கிய இந்த சூறாவளியினால் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதுடன் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் தொலைத் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்ததனால் சுமார் 5000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி தொடர்பான விபத்துக்களில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் சிலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியில்23 பேர் உயிரிழப்பு…
153
Spread the love
previous post