பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென முடங்கியுள்ளதாகவும் அந்த வலைத்தளத்தில் எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி உள்ளிடோர் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருவதுடன் கட்சியின் செயல்பாடு மற்றும் தலைவர்களின் பிரச்சார பயணங்கள் அடங்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org இன்று திடீரென முடங்கியுள்ளதாகவும் பாஜக இணையதளத்தை திறந்தால், திரையில் ‘எரர் 522’ தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த கட்சியின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது எனவும் விரைவில் இணையதளம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.