185
பிலிப்பைன்சின் மிண்டனாவ் தீவில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 60 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் சில வினாடிகள் குலுங்கியதாகவும் அருகில் உள்ள பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேத விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை என்பதுடன் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Spread the love