சீனாவில் கைதான கனடா நாட்டைச் சேர்ந்த இருவரும் சீனாவின் முக்கிய தகவல்களை திருடி கனடாவிடம் வழங்கியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய்இ அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்த நிலையில் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும்இ அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடாவின் வான்கூவர் நகர விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனால் சீனா-கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் கனடாவை சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோர் ஆகியோரை சீனா கைது செய்தது.
அவர்கள் தங்களது சட்ட விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டதாக சீனா தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது இருவரும் கனடாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தியுள்ள சீனா இருவரும் சீனாவின் முக்கிய தகவல்களை திருடிஇ கனடாவிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.