229
முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில், அம்மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைதுசெய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி அத்மிரால் வசந்த கரன்னாகொட இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். பிரதம நீதியர்சர் நலின் பெரேரா தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இந்த மனு மீதான பரிசீலனையின் போது, அம்மனு தொடர்பில் இடையீடு செய்ய அனுமதி கோரி இடையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.
Spread the love