191
இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த சிம்பு, தற்போது முதல் முறையாக நடிகர் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு விமர்சனங்கள் கிடைத்தாலும் சிம்பு, அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது ஹன்சிகா நடித்துவரும் ‘மகா’ படத்தில், கௌரவ வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக தனது உடலமைப்பை மாற்ற லண்டனில் பயிற்சிபெறும் சிம்பு, ‘மகா’ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார். அதனை அடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் மறு உருவாக்கம்தான் இந்தப் படம். இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார். விரைவில், இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்க உள்ளது. மற்றொரு கதாநாயகன் படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை ஆகும்.
Spread the love