198
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கத்தி திரைப்படத்தின் முதல் புகைப்படம் மற்றும் சுவரொட்டி இன்று வெளியானது . `மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கார்த்தி வைத்து இயக்கும் படம் டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகிவருகிறது. கார்த்தியின் 18ஆவது படமாக வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு `கைதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முதலில் கார்த்திக்கு மென்மையான காதல் கதை ஒன்றை லோகேஷ் கனகராஜ் சொல்ல, அதன் தயாரிப்பு சிரமங்களால் தயாரிக்கப்படவில்லை. அதன் பின்னர், லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை கார்த்திக்குப் பிடித்துப்போக, தற்போது, `கைதி’ படமாக உருவாக்கியுள்ளது. ஒரு சண்டை மர்மப் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு கதாநாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி, கேரளா, சென்னை எனப் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க, காட்சிகளை வடிவமைத்துள்ளனர் அன்பறிவ் சகோதரர்கள். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தைத் தயாரித்து வருகிறார். மே மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love