செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட காமினி ஒழுங்கை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே குறித்த இரண்டு வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை கல்கிஸ்ஸ காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய 21 மற்றும் 35 வயதுடைய நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இரண்டு சந்தேகநபர்களும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பவடவுள்ளதுடன் கல்கிஸ்ஸ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 2 வெளிநாட்டவர்கள் கைது…
149
Spread the love