இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விவசாயிகள் நலத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 14.01 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஹெக்டேயர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபா நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 2.18 கோடி விவசாயிகளுக்கு 4,366 கோடி ரூபா பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த, 14.01 லட்சம் விவசாயிகளுக்கு 280.27 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 14.01 லட்சம் விவசாயிகளும் மகாராஷ்டிராவில் 11.56 லட்சம் விவசாயிகளும் பயன்பெற்றுள்ள இத்திட்டத்துக்கான முதல் தவணை நிதியுதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் மொத்தம் 12.5 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடியால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறி;ப்பிடத்தக்கது