விடுதலை புலிகளுடனான யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே பயங்கரவாதிகளாகும் என கைத்தொழில் வாணிபம் மற்றும் கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.
யுத்தத்தின்போது நாளொன்றில் சுமார் 40 பேரே மரணித்துள்ள நிலையில் தற்போது புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் இருப்பதை தாம்மால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் எனவும் பல்பொருள் அங்காடிகளில் உள்நாட்டு பால்மாக்களை மறைத்துவைத்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை மாத்திரம் நுகர்வோரின் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் சிறுவர்களின் இனிப்புப்பொருட்களை வைத்திருக்கும் இடத்தில்தான் சிகரட் பெட்டிகளையும் ம் வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த நடவடிக்கைகளை நிறுத்த நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.