சமூக ஊடகத்தில் நபிகளைப் பற்றி அவதூறாகப் பதிவிட்ட மலேசியர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மலேசியா உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
தகவல் தொடர்பு வட்டங்களைத் தவறாகக் கையாளுதல், இன ரீதியான நல்லிணக்கத்தைக் குலைத்தல், வன்முறையைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் மத ரீதியான பதிவுகளை இட்டோ, பகிர்ந்தோ நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
கடந்த வியாழக்கிழமை மத விவகாரங்கள் துறை அமைச்சர் முஜாஹித் யூசுஃப் ரவா, இஸ்லாமையும் நபிகளையும் அவமதிக்கும் எழுத்துகளைக் கண்காணிக்க இஸ்லாமிய விவகாரங்கள் துறை சார்பில் தனிப்பிரிவை நியமித்திருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையிலி தற்போது இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மலேசியாவில் இதுபோன்ற தண்டனை வரலாற்றிலேயே முதல் முறை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது