179
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் ஊடகவியலாளர்களான ஜுல்பிகா ஷரீப் மற்றும் ஏ.துஷாரா ஆகிய இருவரும் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காக கெளரவிக்கப்பட்டனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் பெண் சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை(9) பொத்துவில் அறுகம்ப சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.
சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஐஃபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டார நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.நசீல், லகுகல பிரதேச செயலாளர் சாந்தரூபன் அனுருத்த, முப்படைகளின் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களில் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்ட மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊடகத்துறையிலும், சமூக வாழ்விலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் ஊடகவியலாளராக பணியாற்றிமைக்காக நுஜா ஊடக அமைப்பின் பொருளாளரும் ஆசிரியையுமான ஊடகவியலாளர் ஜுல்பிகா ஷரீப் மற்றும் நுஜா ஊடக அமைப்பின் உயர்பீட உறுப்பினரும் ஆயுர்வேத வைத்தியசாலை உத்தியோகத்தருமான ஊடகவியலாளர் ஏ.துஷாரா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
பாறுக் ஷிஹான்
Spread the love