212
யாழ்.நகரில் இருந்து நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த ஹயஸ்வாகனத்தின் ரயர் வெடித்ததில் சாரதியினால் வாகனத்தினை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள கடையின் கேற்றினை உடைத்து உள் நுழைந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(9) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வாகனத்தில் எட்டு பேர் பயணித்துள்ள நிலையில் அதில் சென்ற கணவன் மனைவி இருவரும் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பாறுக் ஷிஹான்
Spread the love