ஜப்பானில் திமிங்கலத்தால் கப்பல் ஒன்று தாக்கப்பட்டத்தில் குறைந்தது 87 பயணிகள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த கப்பலானது நிகாடா துறைமுகத்திலிருந்து 125 பேருடன் சடோ தீவிற்கு சென்று கொண்டிருந்த போது திமிங்கலம் தாக்கியதில் 15செ.மீ நீளத்திற்கு கப்பலின்; நடுபகுதியில் பிளவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 87 பயணிகள் காயம் அடைந்துள்ள நிலையில் அதில் 13 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் அந்த கப்பலின் இறக்கையும் இந்த மோதலில் சேதமடைந்துள்ளதாகவும் ஜப்பான் கடற்கரையில் இந்த காலகட்டத்தில் அதிகப்படியான திமிலங்கள் இடம் பெயர்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது