திருச்சி அகதிகள் முகாமிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் முபின் உசேன் என்பவரும் பங்களாதேசத்தினைச் சேர்ந்த 6பேரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களிடம் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை எனவும் அவர்கள் அனுமதியின்றி இந்தியாவில் வசிப்பதாகவும் தெரிவித்து காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
எனினும் தான் ஓர் இந்தியக் குடிமகன் என்பதற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வருமான வரி கணக்கு அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளதாகத் தெரிவித்த முபின் தெரிவித்த போதும் அந்த ஆதாரங்களை ஏற்காத காவல்துறையினர் திருச்சியில் உள்ள வெளிநாட்டு அகதிகள் முகாமில் அவரை அடைத்து வைத்தனர்.
இதையடுத்து, அவர் தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையில் அரசுத் தலைமை வழக்கறிஞர் முன்னிலையாக இருப்பதால் இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.