161
பணிப்பெண்களாக குவைத் சென்று, பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளான 26 பெண்கள், இன்று (11).03.19 தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து, யூ.எல்.230 என்ற விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் மற்றும் ஊதியம் வழங்கப்படாது பணியாற்றிவந்தோர் இதில் அடங்குவதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Spread the love