188
விஜய்யும், சூர்யாவும் அமைதியானவர்கள், அளவாகத்தான் பேசுவார்கள் என்று அவருடன் நடித்த பிரபல நடிகை சாந்தி கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.
‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் அறிமுகமான சாந்தி கிருஷ்ணா தொடர்ந்து மணல் கயிறு, நேருக்கு நேர் முதலான பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கிருஷ்ணன் படம் மூலம் மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கின்றார்.
அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில்,
’நேருக்கு நேர்’ படத்தில் எனக்கு தம்பியாக சூர்யா நடித்திருந்தார். அதுதான் அவருக்கு முதல் படம். அமைதியாக இருப்பார். அளந்து அளந்துதான் பேசுவார். சூர்யாவைப் போலத்தான் விஜய்யும்.
இருவருமே லேசாகத்தான் சிரிப்பார்கள். ஆனால் இதெல்லாம் கேமராவுக்கு வெளியேதான். கேமராவுக்கு எதிரே வந்து நின்றுவிட்டால், அப்படியொரு நடிப்பை வழங்குவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
நேருக்கு நேர் படம் இப்போது ரீமேக் செய்யப்பட்டால், தனுஷ் நடிக்கலாம். சூர்யா கேரக்டரை கார்த்தி செய்தால், சிறப்பாக இருக்கும்’. இவ்வாறு சாந்தி கிருஷ்ணா தெரிவித்தார்.
Spread the love