இலங்கை பிரதான செய்திகள்

தீவகத்தில் சோதனை சாவடிகள் அமைக்குமாறு கோரிக்கை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தீவகத்தில் காவல்துறைச் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிக் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தீவாக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு , கடத்தப்படுதல் , கற்றாளைகள் தீவகத்தில் இருந்து கடத்தப்படுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

குறித்த சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த தீவகத்தில் அராலி சந்தி , வங்களாவடி பகுதிகளில் காவல்துறை காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதிக் காவல்துறைமா மா அதிபரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.