நாட்டிலும் மக்கள் சமத்துவத்துடன் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை எமது நாடு என்ற உணர்வு சகல மக்களுக்கும் ஏற்பட வேண்டும் என்றும் அமைதி, ஐக்கியம் உள்ள நாடாக மாறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரு தரப்பினரும் அரசியல் தீர்வை அடைவதில் வெற்றிபெற்றிருந்தால் யுத்தத்தை தவிர்த்திருக்கலாம். என்றும் தமிழ் மக்கள் கோரிய அரசியல் தீர்வை தருவதாக கூறியதனால்தான் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முழு உலகமும் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இலங்கை அரசு கூறியதை செய்யவில்லை என்றும் நியாயமான அரசியல் தீர்விற்காக தமிழ் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ள நிலையில் இன்று அம் முயற்சி தோல்வியை நோக்கி செல்லுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்குக் காரணம், வீண்விரயங்கள், ஊழல்கள் என்பன மலிந்துவிட்டன என்றும் ஆயினும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக கூறிய சம்பந்தன், இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தால் பொருளாதாரத்தை வெற்றிகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
எப்படியாவது சமாளித்துக்கொண்டு போக நினைக்கின்றபோதும் அவ்வாறு செய்யமுடியாது என்று சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், யுத்தத்தின் காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.