182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் என்பவற்றை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் இளம் ஊடகவியலாளரான கே.குமணன் என்பவரின் வீட்டின் கதவுகளை உடைத்து உட்சென்ற திருடர்கள் வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணணி என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதனையடுத்து காவல்துறையினர் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Spread the love