தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று மாலை போர்ட் எலிஸபத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோற்றுள்ள இலங்கை அணி ஆறுதல் வெற்றியொன்றைப் பெறுவதற்காக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் , காயம் காரணமாக குஷல் பெரேரா, தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக அணியில் அஞ்சலோ பெரேரா, பிரியமல் பெரேரா, தனஞ்சய டி சில்வா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை 3 மாத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தலாகவே தென்னாபிரிக்கா இத்தொடரைக் கருதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.