பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 11-ம் திகதி முதல் மே மாதம் 19ம் திகதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமுருக்கு வந்துள்ளதனையடுத்து அரசின் இணையதளங்களில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசின் இணையதளங்களிலும் அரசியல் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.
தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே அமுலுக்கு வந்து விட்ட நிலையில் நாடு முழுவதும் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த அரசு அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள அமைச்சரவை அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.
அத்துடன் தேர்தல் நடத்தை விதி காரணமாக திட்டங்களை தொடங்கவும், அறிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ; திட்டங்கள் தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரங்களை அரசின் இணைய தளங்களில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது