Home இலங்கை தண்டப்பணம் செலுத்திவிட்டு அன்றே மாவா போதைப்பொருளை விற்பனைக்காக தயார்ப்படுத்தியவர் கைது

தண்டப்பணம் செலுத்திவிட்டு அன்றே மாவா போதைப்பொருளை விற்பனைக்காக தயார்ப்படுத்தியவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்துக்கு நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்திவிட்டு வந்த அன்றைய தினமே மீளவும் மாவா போதைப்பொருளை விற்பனைக்காக தயார்ப்படுத்தியவர் காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு சந்தேகநபர் சுமார் 16 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் பொதிகளுடன் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

‘யாழ்ப்பாணம் சிரேஸ் காவல்துறை அத்தியட்சகர் தினேஸ் கருணாரட்னவின் கீழான சிறப்புக் காவல்துறைப்பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர் தனது உடமையில் மாவா போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) புதன்கிழமை குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது வீடு யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சோதனையிடப்பட்டபோது விற்பனைக்குத் தயாராகப் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 16 கிலோகிராம் மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து சந்தேகநபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதனையடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More