184
சிவனொளிபாதமலைக்கு சென்ற ஒருவர் இன்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலபலாவல என்ற இடத்தை சேர்ந்த 45 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரரான முத்துபண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது குடும்பத்தாருடன் சிவனொளிபாதமலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது ஊசிமலை பகுதியில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளநிலையில் நல்லதண்ணி காவல்துறையினரால் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love