நியூசிலாந்தில் நேற்றையதினம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சுமார் 9 இந்தியர்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று இரு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர்களைக் குறிவைத்தே இந்த தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில் இந்த சம்பவத்துக்குப் பின்னர் சுமார் 9 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக உயர் ஆணையாளர்ர் சஞ்சீவ் கோலி தெரிவித்துள்ளார்.
காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் இவர்கள் 9 பேர் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும், அவர்களுக்கு நடந்தது என்ன என்பது பற்றி விரைவில் அறியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அவுஸ்திரேலியர் வலது சாரி, வன்முறை எண்ணம் கொண்ட தீவிரவாதி எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸகொட் மாரிசன் குடியேற்றத்துக்கு எதிரான எண்ணம் கொண்ட பிரச்சாரத்தை இணையத்தில் அந்த நபர் மேற்கொண்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.