நியூசிலாந்தில் துப்பாக்கி உரிமம் பெறுவதில் உள்ள சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன 20 பேர் காயமடைந்துள்ள நிலையில் நேற்றையதினம் அகதிகள் முகாமிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
இந்த துப்பாக்’ட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேயாவைச் சேர்ந்த தீவிரவாதி பிரெண்டன் டாரண்ட், கடந்த 2017-ல் ஏ பிரிவைச் சேர்ந்த துப் பாக்கி உரிமத்தைப் பெற்றுள் ளார் எனவும் இதன்மூலம் அவர் 5 துப் பாக்கிகளை வாங்கி அதைக் கொண்டுதான் அவர் கிறைஸ்ட்சர்ச் நகரில் துப்பாக்கிச்சூட்டை நடத்தி உள்ளார.
இதைத் தொடர்ந்து துப்பாக்கி உரிமம் பெறுவதில் உள்ள சட்டங் களை கடுமையாக்க முடிவு செய்துள்ளோம். சட்டங்களை மாற்றுவது தொடர்பான ஆலோ சனையில் அதிகாரிகள் ஈடுபட் டுள்ளனர். விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வரும் என்பதை தான் உறுதி செய்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைதான 3 பேரும், புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பில் சிக்கவில்லை எனத் தெரிவித்த அவர் தமது நாட்டின் புலனாய் வுத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக தீவிரமான ஆலோ சனையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.