கோத்தாபய ராஜபக்ச அல்ல, எவர் களமிறங்கினாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிவாகைசூடும் என இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் பொது வேட்பாளராகக் கோத்தாபய ராஜபக்சவைப் போட்டியிட வைப்பதற்கு மஹகந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார் எனச் செய்தி வெளியாகி இருந்தநிலையில், கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால் அது ஐ.தே.கவுக்கு சவாலாக அமையுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
55 சதவீத வாக்குகளுடன் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் தமது கட்சியில் கைவசம் இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே இம்முறை பொதுவேட்பாளர் களமிறங்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.