குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தத்தில் அழிவடைந்திருந்த மட்டுவில் வடக்கு மானாவளை வெல்ல உற்பத்தி நிலையம் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீள செயற்பட ஆரம்பித்துள்ளது. சாவகச்சேரி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்பட்டு வந்த குறித்த வெல்ல உற்பத்தி நிலையம் கடந்த 2000ஆம் ஆண்டு யுத்தத்தால் முற்றாக சேதமடைந்தது.
அதன் பின்னர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தினால் உற்பத்தி நிலையம் மீள புனரமைக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வெல்ல உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனை வெல்லத்தை புலம்பெயர் நாடுகளில் இருந்து வருவோரும் , தென்னிலங்கையில் இருந்து வருவோரும் கொள்வனவு செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ வெல்லம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றது.