அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்முலா வன் கார்பந்தயப் போட்டியில் பின்லாந்து வீரர் போட்டாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய கார்பந்தய போட்டியான பார்முலா வன் கார்பந்தயப் போட்டி இந்த ஆண்டு 21 சுற்றுகளாக நடத்தப்படுகின்ற நிலையில் முதலாவது சுற்றான அவுஸ்திரேலிய கிராண்ட்பிரி நேற்றையதினம் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்ட நிலையில் பந்தய தூரமான 307.574 கிலோமீற்றர் இலக்கை பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 25 நிமிடம் 27.35 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் குறிப்பிட்ட சுற்றை வேகமாக கடந்த வகையில் அவர் மொத்தம் 26 புள்ளிகளை பெற்றுள்ளார்.
5 முறை சம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹமில்டன் (மெர்சிடஸ் அணி) அவரை விட 20.886 வினாடிகள் பின்தங்கி 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.