சீனா முழுவதும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட 13,000 பேரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சீனாவின் ஜிங்ஜாங்க் பகுதியில் சுமார் 1 மில்லியன் முஸ்லிம் மக்கள் தற்காலிக முகாம்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் தெரிவித்துள்ள நிலையிலேயே நேற்றையதினம் சீன அரவு இவ்வாறு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
குறித்த வெள்ளை அறிக்கையில் ஜிங்ஜாங் பகுதியில் 1990ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மக்களும், நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் எனவே, மக்கள் பாதுகாப்பு கருதி பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை மட்டும் 12,995 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,588 பயங்கரவாத அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் 2,052 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் 4,858 சட்டவிரோத மத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 30,645 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 3,45,229 சட்டவிரோதமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் மத, மொழியியல் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், சீனாவின் ஜின்ஜியாங் பகுதி பண்டைய காலத்திலிருந்து பயங்கரவாதிகளின் எல்லையாக இருந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.