ஒடிசாவில் வேதாந்தாவின் அலுமினிய சுத்தகரிப்பு தொழிற்சாலைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் ஒடிஸா தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேதாந்தா நிறுவனத்தின் சுற்றுப்புறத்திலுள்ள மூன்று கிராமங்களில் உள்ள மக்கள இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆட்குறைப்பில் ஒரு பகுதியாக ஒரு ஊழியரை நீக்கியதாக கூறப்பட்டதையடுத்து நூற்றுக்கும் அதிகமானோர் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஒடிசா பாதுகாப்பு படை போராட்டக்காரர்களை நோக்கி கற்களை எறிந்ததாகவும் பதிலுக்கு போராட்டக்காரர்களுக்கும் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஸ்டெர்லைட்டில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் 13 பேர் இறந்த சம்பவம் இடம்பெற்நு பத்து மாதங்களுக்குள் ஒடிசாவில் இச்சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது