197
அம்பலங்கொட, அகுரல கடலில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவாக கடலில் நீராடச் சென்றுள்ள நிலையில் குறித்த இருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதனையடுத்து அவர்களை காப்பாற்றி பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 17 மற்றும 66 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love