148
காஷ்மீரிலுள்ள துணைப்படை முகாமில் படைவீரர் ஒருவர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் அவருடன் பணியாற்றிய மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு படை வீரர்கள் நான்கு பேருக்குள் கைகலப்பு ஏற்பட்டதனையடுத்து ஒரு படை வீரர் தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களைச் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மூன்று பேரைச் சுட்டதுடன், அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ள நிலையில் அவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love