Home உலகம் கூகுள் நிறுவனத்துக்கு 1.49 பில்லியன் யூரோ அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு 1.49 பில்லியன் யூரோ அபராதம்

by admin

அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரினால் 1.49 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக நேற்றையதினம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளார் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் இணைய வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது எனவும் கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் கூகுள் முதலில் தனது போட்டியாளர்களின் இணையதளங்களில் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளதுடன் அவர்களிடம் குறைந்த எண்ணிக்கையில் விளம்பரங்கள் வெளியிட மிகவும் லாபகரமான இடம் ஒதுக்குவதற்கு முன்பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் தனது போட்டி இணையதளங்களில் ஏதாவது தேடு விளம்பரங்கள் வெளியானால், மாற்றம் செய்வதற்கு முன்பு கூகுளிடம் எழுத்து மூலம் அனுமதி பெறவேண்டும் என லியுறுத்தி உள்ளது எனவும் போட்டிகளுக்கான ஐரோப்பிய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More