சீனாவில் இன்று வீதியோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை மோதச் செய்து நடத்திய திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம் ஜாவ்யாங் நகரில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.; பாதசாரிகளை மோதிய சாரதி ஓட்டிய காரை நிறுத்தாமல் சென்றதனையடுத்து அவர்மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சீனாவில், தனிப்பட்ட கோபங்களை பொதுமக்கள் மீது காட்டும் போக்கு அண்மையில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சிலர் மனரீதியிலான அழுத்தங்களால் பாடசாலைகள்; மற்றும் வணிக வளாகங்களில் சென்று தாக்குதல் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது