கர்நாடகாவில் ஓலா வாடகை கார்களுக்கு அம்மாநில போக்குவரத்து துறை 6 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது. ஓலா கப்ஸ் எனும் இந்த வாடகை கார் சேவை நிறுவனம்தான் முதன்முதலில் தொலை தொடர்பு மூலமாக மும்பையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிவித்து நேற்றைய தினம் கர்நாடக போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓலா நிறுவனம் அவசர தொழில்நுட்ப சேவை வாகன விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றது. மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். ஓலா இந்த சேவையை எவ்வித அறிவிப்புமின்றி செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியானதனையடுத்து 1 வாரத்தில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பியும் பதிலளிக்காதமையினால் அந் நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஓலா நிறுவனத்தில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் 6 மாதங்களுக்கு கர்நாடகா முழுவதும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓலா சாரதிகள் தங்கள் சாரதி உரிமங்களை போக்குவரத்து துறையிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.