231
12-வது ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் போட்டியிட்ட நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 17.1 ஓவரில சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனையடுத்து 71 என்னும் எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17. 4 ஓவரில் 71 ஓட்டங்களை எடுத்து எளிதில் வெற்றி பெற்றுள்ளது.
Spread the love