158
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என தெரிவித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று தொடர்பிலேயே இவ்வாறு முறையிடப்பட்டுள்ளது.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலேயே இவ்வாறு முஐறப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love