மத்திய புகையிரத நிலையம் அருகே 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றதனையடுத்து ஆந்திராவை சேர்ந்த 4 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையிலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மத்திய புகையிரத நிலையம் அருகே இன்று காலை சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தம்து உடலில் பதுக்க வைத்திருந்த 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது குறித்த 4 பேரும் ஆந்திர மாநிலத்திலிருந் சென்னைக்கு இந்த பணத்தை கடத்தி வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து தேர்தல் செலவுக்காக இந்த பணம் கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது