கிழக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த ஐந்தரை (5.5) ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் காணி விடுவிப்பு நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் காணிக்கான ஆவணம் கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஐயசேகரவினால், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி திரியாயில் 3 ஏக்கர் காணியும் அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவனையில் 0.5 ஏக்கர் காணியும் திருக்கோவில் பகுதியில் 2 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருக்கோவில் பகுதியில் 2 ஏக்கர் அரச காணி மீள வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற வகையில் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவம் கூறியுள்ளது.