அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ்சிங் நேரம் வரும் போது ஓய்வு குறித்த முடிவை அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்ட வித்தியாசத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ்சிங் அடித்த அரைசதம் அடித்திருந்தும், அணியின் தோல்வியடைந்திருந்த நிலையில் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
கடந்த 2 வருடங்களாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தான் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும் போது முதல் நபராக ஓய்வு முடிவை அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.