தாய்வானை தனி நாடாகவும், இந்தோ-சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாக தெரிவித்து சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை கைப்பற்றியுள்ள சீன குடியுரிமை அதிகாரிகள் அவற்றை அழித்துள்ளனர்.
தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற தாய்வான் தொடர்ந்தும் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே சீனா தெரிவித்து வருவதன் காரணமாக சீனாவில் தயார் செய்யப்படும் உலக வரைபடங்களில் இந்தியாவின் அருணாசலபிரதேசம் மற்றும் தாய்வான் ஆகியன சீனாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், தாய்வானை தனி நாடாகவும், இந்தோ-சீனா எல்லையை தவறாகவும் வரையறை செய்திருந்ததாகவும் தெரிவித்து சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை சீன குடியுரிமை அதிகாரிகள் கைப்பற்றி அழித்துள்ளனர்; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது