293
பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தெரு மூடி மண்டபம் வாகன விபத்தால் சேதமடைந்துள்ளது. தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த மண்டபம் இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற வாகன விபத்தின் போதும் சிறிதளவு பாதிபடைந்திருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை சீமெந்து ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துள்ளனத்தில் மடத்தின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
பழமை வாய்ந்த குறித்த மண்டபத்தினை சீராக பராமரிக்கவோ விபத்துக்களில் இருந்து பாதுக்காப்பதற்கான பொறிமுறைகளையோ பருத்தித்துறை நகர சபை முன்னெடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love