197
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் முத்துக்காளை தான் இறந்துவிட்டதாக சிலர் வதந்தி பரப்புவதாக வேதனை தெரிவித்தார்.
அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காமெடி நடிகர் முத்துக்காளை இது தொடர்பில் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
அங்கு முத்துக்காளை பேசுகையில், “இருக்கும் யூடியூப் தொலைக்காட்சிகளில் நான் இறந்துபோய் 2 வாரம் ஆகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நான் உயிரோடு தான் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன். படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுபற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.
Spread the love