259
குடும்ப சூழ்நிலை காரணமாக ஐ.பி.எல். தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதாக டேவிட் வில்லே தெரிவித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான டேவிட் வில்லேயின் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவர் அணியுடன் இணைவது தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. .
இந்த நிலையில் குடும்ப நிலைமை காரணமாக இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து தான் விலகுவதாக அவர் நேற்றையதினம் அறிவித்துள்ளார். ஏற்கனவே உபாதை காரணமாக நிகிடி ஆட முடியாத நிலையில் டேவிட் வில்லேயும் விலகுவது சென்னை அணிக்கு இன்னொரு பின்னடைவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love