பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு அதனை பதிவு செய்தவரின் தகவலை பெறுவது தொடர்பாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய குழுவொன்றினை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அது தொடர்பில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அத்துடன் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் முகப்புத்தகம் , வட்ஸ்-அப், யு-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தநிலையில் அவ்வாறு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என மேற்குறித்த சமூக வலைததள நிறுவனங்களுக்கு நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யூ-டியூப்பில் மீண்டும் பதிவாகியுள்ள ஒரு ஒலப்பதிவில் பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர் என கூறி பேசியுள்ள ஒரு இளம்பெண் பொள்ளாச்சி கும்பல் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததில் சிறுமி இறந்து விட்டதாகவும், சிறுமியின் உடலை திருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த ஒலிப்பதிவின் உண்மை தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வந்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் யூ-டியூப்பில் பதிவு செய்தவர் பற்றிய தகவலை தெரிவிக்குமாறு யூ டியூப் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். கேட்டுள்ளனர்.
இதனையடுத்து ஏற்கனவே, பொள்ளாச்சி சம்பவம் தொடர்புள்ள வீடியோக்களை நீக்கக்கோரி கடிதம் அனுப்பியதில் 90 சதவீத வீடியோக்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மார்பிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் இருப்பதாகவும் யூ-டியூப் நிறுவனம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு விளக்கம் அளித்துள்ளது.